Zubeen Garg Funeral | பாடகர் ஜுபின் கார்க் உடல் தகனம் - மீளாத்துயரத்தில் அசாம் மக்கள்
அசாமி பாடகர் ஜுபின் கர்க் உடல் கவுஹாத்தியில் திரளான ரசிகர்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக கண்ணாடி பேழையில் அசாமின் பாரம்பரிய கமோசா துண்டு போர்த்தப்பட்டிருந்த அவரது உடலுக்கு அம்மாநில ஆளுநர் லக்ஷமன் பிரசாத் ஆச்சார்யா, பாடகர் பபூன் மற்றும் லட்சக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. ஜுபின் கர்க்குக்கு கவுஹாத்தியிலும், ஜோராட்டிலும் நினைவு மண்டபம் கட்டப்படும் என அசாம் மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
