பேருந்தில் சென்ற ஊழியர்களை சரமாரியாக தாக்கிய YSR கட்சியினர் - பரபரப்பு காட்சி

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, சித்தூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கி தீ வைக்கப்பட்டன. இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவைக் கண்டித்து, சித்தூரில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சித்தூரில் உள்ள கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டன. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், வேலூரில் இருந்து சித்தூர், திருப்பதி மற்றும் ஆந்திராவின் மற்ற பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com