விலங்கு மாட்டி இழுத்து சென்ற போலீஸ் - சிரித்து விளையாடி வெறுப்பேற்றிய யூடியூபர்
கேரளாவில் மாணவர்கள் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்த வழக்கில் பிரபல யூடியூபர் கைது செய்யப்பட்டார். கடந்தாண்டு, நண்பர்களோடு காரில் மதுபோதையில் வந்த யூடியூபர் முகம்மது ஷெகின் ஷா, திருச்சூரில் கல்லூரி மாணவர்கள் இருவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், இரு சக்கர வாகனத்தில் சென்ற மாணவர்களை பின் தொடர்ந்து காரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார். இந்நிலையில்10 மாதங்களுக்கு பின்னர் முகம்மது ஷெகின் ஷாவை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
Next Story
