கர்நாடகா : நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி

கர்நாடகா : நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி, உயிரிழந்த இளைஞரின் உடலை தேடும் பணி தீவிரம்
கர்நாடகா : நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி
Published on
கர்நாடகாவில் 170 அடி நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். பெலகாவியில் உள்ள கோகாக் நீர்வீழ்ச்சியில் ரம்ஜான் பண்டிகையொட்டி ஏராளமான சுற்றுலாப்பயணிகள் திரண்டிருந்தனர். இந்நிலையில் காசி என்ற இளைஞர், பக்கவாட்டு வழியாக பாறைகளின் வழியே நீர்வீழ்ச்சியின் உச்சிக்கு செல்ல முயன்றார். அப்போது திடீரென தவறி விழுந்த அவர், பலியானார். அருவியின் நீரில் அடித்து செல்லப்பட்ட உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com