புதுச்சேரியில் சாலையின் நடுவே இளைஞர் தீக்குளித்து தற்கொலை முயற்சி - பரபரப்பு
புதுச்சேரியில் இளைஞர் ஒருவர் உடலில் பெட்ரோலை ஊற்றி தீயிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது... முதலில் அந்த அதிர்ச்சி காட்சியை பார்க்கலாம்...புதுச்சேரி,ரெட்டியார்பாளையம் பகுதியில் இயங்கி வரும் ஹோட்டிலில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன்.
இவர் இன்று திடீரென தான் வேலை செய்யும் ஹோட்டலின் எதிரே சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது ஏறி நின்றவாறு பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றிக் கொண்டு தீயிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ரெட்டியார்பாளையம் போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து வாலிபர் உடலில் பற்றி எறிந்த தீயினை அணைத்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கள்ளகாதல் விவகாரத்தில் ஹோட்டலில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், வெங்கடேசன் ஹோட்டல் முன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதது தெரிய வந்துள்ளது.
