3 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த இளைஞர் கைது

3 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை வசந்தம் நகரை சேர்ந்த சோலை கணேஷ் என்பவர், ஏற்கனவே திருமணமான நிலையில், சிங்கப்பூரில் வேலை பார்த்தபோது சங்கீதா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், சொந்த ஊருக்கு திரும்பி வந்து 17 வயது பெண் ஒருவரை மூன்றாவதாக திருமணம் செய்திருக்கிறார்.

இதை அறிந்த சங்கீதா, புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, 72 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாகவும் அதில் கூறி இருந்தார். இந்த புகாரின் பேரில் சோலை கணேஷை போலீசார் கைது செய்தனர். அவரது தாய், சகோதரர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com