

புதுச்சேரியில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப கோரி, 300-க்கும் மேற்பட்ட வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் சட்டமன்றத்தை, நோக்கி அமைதி பேரணி சென்றனர். அப்போது, அவ்வழியாக வந்த முதலமைச்சர் நாராயணசாமி, திடீரென இளைஞர்களை சந்தித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அவர்கள், கையெழுத்திட்ட மனுவையை
மனுவை பெற்றுக்கொண்ட அவர், காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என உறுதி அளித்து சென்றார்.