பேருந்தில் சில்மிஷம் செய்ததாகக்கூறி இளம்பெண் வீடியோ - இளைஞர் தற்கொலை

x

கேரளாவில் பேருந்து பயணத்தின் போது தன்னை சில்மிஷம் செய்ததாக இளம்பெண் வீடியோ வெளியிட்டதால் வேதனை அடைந்த இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த

தீபக் என்பவர், கண்ணூர் நோக்கி பேருந்தில் பயணம் செய்தபோது, அருகில் இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில், தீபக் தன்னை சில்மிஷம் செய்ததாக அந்த இளம் பெண் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டிருந்தார். இதனால் வேதனை அடைந்த தீபக், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இளம் பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீபக்கின் குடும்பத்தினர், காவல்துறை டிஜிபியிடம் புகார் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்