பெட்ரோல் போட மறுத்த ஊழியரை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்கள்.. பதைபதைக்கும் CCTV

x

ஹெல்மெட் அணியாமல் வந்ததால் பெட்ரோல் வழங்க மறுப்பு - துப்பாக்கிச்சூடு

மத்தியப்பிரதேசத்தில், பெட்ரோல் பங்கில் துப்பாக்கிச்சூடு நடந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் பிந்த் Bhind மாவட்டத்தில், ஹெல்மெட் அணியாமல் பெட்ரோல் பங்கிற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த உத்தரவை பின்பற்றிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்களுக்கு பெட்ரோல் வழங்க மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில் 55 வயது ஊழியர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் இருவரையும் அடையாளம் கண்டுள்ள போலீசார், கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்