விநாயகர் சிலை கரைக்கும்போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்

x

ஹரிதுவாரில் கங்கை ஆற்றுல விநாயகர் சிலை கரைக்கும்போது ஒருத்தர் தண்ணீர்ல அடிச்சுட்டு போயிட்டாரு... இதுவரைக்கும் அவரோட நிலமை என்னனு தெரியல...

உத்தரகாண்ட் மாநிலம், ஹரிதுவாரில் விநாயகர் சிலையை கரைக்கும்போது, இளைஞர் ஒருவர் கங்கை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹரிதுவாரில் விநாயகர் சதுர்த்தி அன்று வைக்கப்பட்டிருந்த சிலைகளை கரைப்பதற்காக சிலர் கங்கை ஆற்றுக்கு எடுத்துச் சென்றனர். நீரோட்டம் அதிகமாக இருந்ததால், ஆற்றில் இறங்கிய இளைஞர் ஒருவர் திடீரென தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்ட நிலையில், ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட இளைஞரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீரோட்டம் அதிகமாக இருப்பதால், ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டாம் என காவல்துறையினர் தொடர்ந்து ஒலி பெருக்கியின் மூலம் அறிவுறுத்தி வந்துள்ளனர். எனினும், பொதுமக்கள் சிலர் அதனை பொருட்படுத்தாமல் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைத்து வரும் நிலையில், இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்