நாற்காலியில் casual ஆக அமர்ந்திருந்த இளைஞர் - மாரடைப்பால் திடீர் மரணம்
நாற்காலியில் அமர்ந்திருந்த இளைஞர் மாரடைப்பால் திடீர் மரணம்
ஹரியானாவில் நாற்காலியில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டோலா கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணியாற்றி வந்த விகாஸ் சிங் என்ற இளைஞர் தனது நிறுவனத்திற்கு வெளியே நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது நாற்காலியில் சாய்ந்த படி மயங்கி விழுந்தார். சக ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் விகாஸ் சிங் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் விகாஸ் சிங்கின் குடும்பத்திற்கு அவர் பணியாற்றிய நிறுவனம் 5 லட்சம் ரூபாயை நிவாரணமாக வழங்கியது.
Next Story
