ஹாஸ்பிடல் வாசலிலேயே பெண்ணை தூக்கி தாலி கட்டிய இளைஞர்
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனையே மணமேடையாக மாறிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது...ராஜ்கார் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நெகிழ்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியது...திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மணமகள் நந்தினி சோலங்கிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது... முழுமையான ஓய்வுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஆனால் 2 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இதேபோன்று பொருத்தமான முகூர்த்தம் வரும் என்பதால் மணமக்கள் குடும்பத்தினர் திட்டமிட்டபடி திருமணத்தை நடத்தி முடிக்க முடிவெடுத்தனர். அதன்படி மருத்துவமனையிலேயே திருமணத்தை நடத்த மருத்துவமனை அதிகாரிகள் சம்மதித்தனர். மணமகன் ஆதித்யா சிங் மணமகள் நந்தினியை கைகளில் சுமந்து வந்து திருமணம் செய்து கொண்டார்... உறவினர்கள், மருத்துவர்கள், நோயாளிகள் அட்சதை தூவி வாழ்த்து மழை பொழிந்தனர்.
Next Story
