ரோட்டிலேயே இளம்பெண்ணை எட்டி உதைத்த இளைஞர்.. பறந்து விழுந்த பகீர் CCTV

x

இளம்பெண்ணை எட்டி உதைத்த,மதுபோதை ஆசாமி

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே, மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர், இளம்பெண்ணை எட்டி உதைத்து தாக்கும் சிசிடிவி காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவம்பாடி அங்காடி பகுதியில் இயங்கி வரும் மதுக்கடை முன்பாக, மது அருந்திவிட்டு, இளைஞர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதை தட்டிக்கேட்ட அப்பகுதியை சேர்ந்த பெண்ணை, எட்டி உதைத்து இளைஞர் தாக்கும் சிசிடிவி காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ள நிலையில், போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்