காயத்துடன் உயிருக்கு போராடிய இளைஞர்- வீடியோ எடுத்த பொதுமக்கள்

x

புதுச்சேரி அருகே அரிவாளால் வெட்டப்பட்டு காயமடைந்து உயிருக்கு போராடியவரை மருத்துவமனையில் சேர்க்காமல் அவரை பொதுமக்கள் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வில்லியனூர் ஜி.என்.பாளையத்தில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வரும் மணிகண்டன் என்பவரை, அவரது மைத்துனர் ராஜி, தனது நண்பர்களுடன் சேர்ந்து வழிமறித்து வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த மணிகண்டன், ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காயத்துடன் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், பொதுமக்கள் வீடியோ எடுத்த சம்பவம், பதைபதைக்க வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்