காதலை ஏற்க மறுத்த காதலி கண்முன்னே இளைஞர் தற்கொலை முயற்சி

x

உத்தரப்பிரதேசத்தில், காதலை ஏற்க மறுத்த காதலியின் கண்முன்னே இளைஞர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலியா பகுதி, அம்டாரியா கிராமத்தை சேர்ந்த இளைஞர், பெண்ணின் வீட்டிற்கு சென்று தனது காதலை ஏற்குமாறும், திருமணம் செய்து கொள்ளுமாறும் கூறி, கையில் பெட்ரோல் கேனுடன் நிர்பந்தம் செய்துள்ளார். ஆனால், காதலை ஏற்க மறுத்த நிலையில், காதலியின் கண் முன்னே தன் உடலில் பெட்ரோல் ஊற்றி இளைஞர் தீ வைத்துக் கொண்டார். அருகில் இருந்தவர்கள் இளைஞரின் உடலில் பற்றிய தீயை அணைத்த நிலையில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்