``நீ மாப்ள உனக்கு ஒன்னும் ஆக கூடாது’’ கரைபுரளும் வெள்ளத்தில் தோள் கொடுத்த சொந்தம்

x

``நீ மாப்ள உனக்கு ஒன்னும் ஆக கூடாது’’ கரைபுரளும் வெள்ளத்தில் தோள் கொடுத்த சொந்தம்

வெள்ளப்பெருக்கு - மணமகனை தோளில் தூக்கிச் சென்ற உறவினர்கள்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே, தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பாய்ந்தோடிய நிலையில், மணமகன் ஒருவரை உறவினர்கள் தூக்கிக்கொண்டு கடந்து சென்ற காட்சி வெளியாகியுள்ளது. ஜக்டியல் (Jagtial) மாவட்டத்தை சேர்ந்த கொமுரமல்லு என்பவருக்கு, கரீம் நகரில் திருமணம் நடைபெற முடிவு செய்யப்பட்டிருந்த‌து. இதற்காக, உறவினர்கள் அனைவரும் காரில் புறப்பட்டு வந்தபோது, தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பாய்ந்தோடியது. நீண்ட நேரம் காத்திருந்தும் வெள்ளம் குறையாத‌தால், மணமகனை, தங்களது தோளில் சுமந்தவாறு கடந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்