

வாராக்கடன் சிக்கல் காரணமாக. யெஸ் வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள நிலையில், வங்கி நிதி விவகாரங்கள் தொடர்பாக, அதன் நிறுவனர் ராணா கபூரிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. முன்னதாக, மும்பையில் ராணா கபூரின் வீட்டிற்குச்சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதுடன், அவரின் மனைவி பிந்து கபூரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதையடுத்து ராணா கபூரை, அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், நிதி மோசடிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால், ராணா கபூரை கைது செய்துள்ள அமலாக்கத்துறை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளது. இதற்கிடையே, யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை, ஸ்டேட் வங்கி கையகப்படுத்த உள்ளதாக அந்த வங்கியின் தலைவர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.