ஆலமரத்தடியில் பூஜை.. தேனீக்கள் தாக்கியதால் அலறியடித்து ஓடிய பெண் பக்தர்கள்
உத்தர பிரதேச மாநிலம் எட்டாவா பகுதியில், ஆலமரத்தடியில் பூஜை நடத்திக் கொண்டிருந்த போது தேனீக்கள் தாக்கியதால் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
வாட் பகுதியில் உள்ள ஆலமரத்தின் கீழ், பெண் பக்தர்கள் சிலர் சாவித்திரி பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் மரத்திலிருந்து பறந்து வந்த ஏராளமான தேனீக்கள், பக்தர்களை சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்கின. இதையடுத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அலறி ஓடினர். இந்த தேனீ தாக்குதலில் சுமார் 25க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர்.
Next Story
