"மதிக்க மாட்டியா?" - வளர்ப்பு நாயை வெட்டிய உரிமையாளர்
கேரள மாநிலம் தொடுவிழாவில் சைஜு தாமஸ் என்பவர் ஒரு வருடமாக நாய் ஒன்றை வளர்த்து வரும் நிலையில் வளர்ப்பு நாயை அழைத்த நிலையில் அந்த நாய் வர மறுத்ததால் அரிவாள் கொண்டு பல இடங்களில் நாயை வெட்டி உள்ளார் தொடர்ந்து நாயை தெருவில் விரட்டி விட்ட நிலையில் வெட்டு காயங்களுடன் நடக்க முடியாமல் பரிதாபமாக தெருவில் சுற்றி திரிவதை கண்ட அப்பகுதி மக்கள் அனிமல் ரெஸ்க்யூ டீமிடம் கூறியதைத் தொடர்ந்து ரெஸ்க்யூ டீமை சேர்ந்த கீர்த்தி தாஸ் மஞ்சு என்பவர்கள் நாயை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அளிக்கப்பட்ட சிகிச்சையால் நாய் அபாய கட்டத்தை தாண்டி உள்ளது. நாய் கொடூரமாக வெட்டப்பட்டதை தொடர்ந்து நாயின் உரிமையாளர் சைஜு தாமஸ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Next Story