பெண்ணை மரத்தில் கட்டி வைத்த விவகாரம் - ஆந்திர அரசுக்கு நோட்டீஸ்

x

சித்தூரில் கடனுக்காக பெண்ணை மரத்தில் கட்டி வைத்த விவகாரத்தில் ஆந்திர அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. சித்தூர் மாவட்டம், நாராயணபுரத்தில் கடன் திருப்பிச் செலுத்தாதது தொடர்பான தகராறில்,பெண் ஒருவரை மரத்தில் கட்டிவைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, இரு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர மாநில தலைமைச் செயலருக்கும், டிஜிபிக்கும் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்