180 மீட்டருக்கு Ola Bike புக் செய்த பெண் | காரணத்தை கேட்டு அதிர்ந்து போன Rider

x

தெருநாய்கள் தொல்லை - 180 மீட்டருக்கு Ola Bike புக் செய்த பெண்

டெல்லியில் தெருநாய்களிடமிருந்து தப்பிக்க பெண் ஒருவர் 180 மீட்டர் தூரத்துக்கு Ola Bike புக் செய்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியது.

தலைநகர் டெல்லியில் பெண் ஒருவர் Ola Bike Raid புக் செய்தார். Bike Rider ஓடிபி நம்பரைக் கேட்டு உள்ளீடு செய்த பிறகு லொகேஷனை பார்த்தபோது வெறும் 180 மீட்டர் பயண தூரம் காட்டப்பட்டுள்ளது.

இது குறித்து கேட்டதற்கு, தெரு நாய்களின் தொல்லையால் Ola Bike Ride புக்கிங் செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு ஆச்சரியமடைந்த Ola Rider சிரித்தபடியே அந்த பெண்ணை, லொகேஷனில் இறக்கிவிட்டு, கட்டணமாக 19 ரூபாய் பெற்றுக் கொண்டார். இதனை அந்த ரைடரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ள நிலையில், அந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்