தற்கொலைக்கு முயன்ற பெண்...கதவை உடைத்து காப்பாற்றிய காவலர்

x

உத்தரப்பிரதேசத்தில், வீட்டில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காவலர் ஒருவர், கதவை உடைத்து காப்பாற்றிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.

சித்திரக்கூட் பகுதியைச் சேர்ந்த சீமா ஸ்ரீவஸ்தவா என்பவர், காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், இதற்கு தனது கணவரே காரணம் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து உடனடியாக அங்கு விரைந்த தோமர் என்ற காவலர், வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பெண்ணை காப்பாற்றினார். இதற்காக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்