பாலியல் புகாரில் சிக்கிய பிஷப் ஃபிராங்கோவிற்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர் மர்ம மரணம்

பாலியல் புகாரில் சிக்கிய, முன்னாள் பேராயர் பிராங்கோ முல்லகலுக்கு எதிராக, வாக்குமூலம் அளித்தவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
பாலியல் புகாரில் சிக்கிய பிஷப் ஃபிராங்கோவிற்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர் மர்ம மரணம்
Published on

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பேராயராக பணியாற்றி வந்த பிராங்கோ முல்லக்கல், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, கேரள மாநிலத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் புகார் அளித்ததை தொடர்ந்து, பிராங்கோவை போலீசார் கைது செய்தனர். கோட்டயம் பாலா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு 21 நாட்களுக்கு பிறகு ஜாமின் கிடைத்தது. இந்த நிலையில், பிராங்கோவிற்கு எதிராக போலீசில் வாக்குமூலம் அளித்திருந்த மற்றொரு அருட்தந்தை குரியகோஸ், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 67 வயதாகும் குரியகோஸ், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள அன்னை மேரி தேவாலயத்தில் உள்ள அவரது அறையில் பிணமாகக் கிடந்தார். அவரது இறப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. பிராங்கோ முல்லக்கல்லுக்கு எதிராக வாக்குமூலம் அளித்ததன் காரணமாக குரியகோஸ் கொல்லப்பட்டிருப்பதாக, அவரின் சகோதரர் ஜோஸ் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com