India Russia Relationship | ``கூட்டாளி ரஷ்யாவுடன்.. நாங்கள் தயார்’’ - உலகம் முன் இந்தியா அறிவிப்பு

``கூட்டாளி ரஷ்யாவுடன்.. நாங்கள் தயார்’’ -

``எங்க கூட்டாளி ரஷ்யாவுடன்.. நாங்கள் தயார்’’ - ஒரு முடிவோடு இறங்கி உலகம் முன் இந்தியா அறிவிப்பு #putin #indiarussiafriendship #jaishankar அணுசக்தி துறையில் ரஷ்யாவுடன் இணைய தயார் என இந்தியா அறிவிப்பு அணுசக்தி துறையில் இந்தியாவின் முக்கிய கூட்டாளி ரஷ்யா என்றும் கூடன்குளம் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியா–ரஷ்யா புதிய இருதரப்பு ஒத்துழைப்பு மாநாட்டில் காணொளி காட்சி வாயிலாக பேசிய அவர், பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, ஜி20 மற்றும் ஐநா போன்ற உலக அமைப்புகள் வழியாக இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பில் உள்ள இந்தியா, மனிதநேய அடிப்படையில் ரஷ்யாவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். அணுசக்தி துறையில் ரஷ்யா இந்தியாவின் முக்கிய கூட்டாளியாக இருப்பதாக தெரிவித்த அவர், 2047க்குள் 100 கிகாவாட் அணுசக்தி உற்பத்தி இலக்கை அடைய இந்தியா முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும், இருநாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தை 2030க்குள் 100 பில்லியன் டாலராக உயர்த்தும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com