கேரளாவில் மதுக்கடை வருமானத்தை பெருக்க அரசால் புதிய திட்டம் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கு விதிமுறை தளர்த்தப்பட்டு மதுபான விற்பனையை கேரள அரசு துவங்கிய நிலையில், சமூக இடைவெளியை காக்க, விற்பனைக்காக வகுத்த புதிய திட்டம், அரசு எதிர்பார்த்த வகையில் அமையவில்லை என்றும், மதுக் கடைகளில் வருமானம் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மொபைல் அப்ளிகேஷன் திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என, மதுப்பிரியர்கள் தெரிவித்துள்ளனர்.