கால்வாயில் விழுந்த காட்டுயானை - மூன்று நாட்களுக்கு பின் மீட்பு
கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் கால்வாயில் விழுந்த காட்டு யானை மூன்று நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது. சிவனசமுத்திரா அருகே தண்ணீர் தேடி வந்த காட்டு யானை, பெரிய பாசன கால்வாயில் தவறி விழுந்தது. யானையை மீட்க சுமார் 72 மணி நேரம் போராடிய கிராம மக்கள் சோர்வடைந்த நிலையில், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், யானைக்கு உணவு, தண்ணீர் வழங்கியதோடு மயக்க ஊசி செலுத்தி பாதுகாப்பாக மேலே கொண்டு வந்தனர்.
Next Story
