வனத்துறை அதிகாரியை கொடூரமாக தாக்கிய காட்டுப்பன்றி
உத்தரப்பிரதேச மாநிலம் சீர்சாலி கிராமத்தில் மீட்பு நடவடிக்கைக்காக சென்றிருந்த வனத்துறை அதிகாரியை காட்டுப்பன்றி கொடூரமாக தாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
இதையடுத்து சக ஊழியர்கள் காட்டுப்பன்றியை தடியால் அடித்து விரட்டிய பின்னர், காயமடைந்த அதிகாரியை மீட்டுள்ளனர்.
சீர்சாலி கிராமத்தில் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமடைந்ததாக வந்த புகாரை தொடர்ந்து அங்கு காட்டுப்பன்றியை பிடிக்க சென்றிருந்த போது, வனத்துறை அதிகாரி சுபம் பிரதாப் சிங்கை காட்டுப்பன்றி கடுமையாக தாக்கியுள்ளது. இதையடுத்து, சக ஊழியர்கள் தடி கொண்டு காட்டுப் பன்றியை விரட்டி காயமடைந்த அதிகாரியை மீட்டுள்ளனர்.
Next Story
