காரைக்காலில் கணவர் மீது டீசல் ஊற்றி தீ வைத்த மனைவி
காரைக்காலில் கணவர் மீது டீசல் ஊற்றி தீ வைத்த மனைவி
காரைக்கால் அருகே, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது, டீசல் ஊற்றி மனைவி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுரக்குடியைச் சேர்ந்த 46 வயது செல்வம், மது போதையில் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மீண்டும் ஏற்பட்ட தகராறில் செல்வம் மீது மனைவி டீசல் ஊற்றி தீ வைத்துள்ளார். பலத்த தீக்காயமடைந்த செல்வத்தை மகன் காப்பாற்றி காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
#kararikal # fire #huband #hospital
