மாயமான கணவனை 8 ஆண்டுகளுக்கு பின் பிடித்த மனைவி... வேறு பெண்ணுடன் ரொமான்டிக் ரீல்ஸ் போட்டதால் சிக்கிய சோகம்...
மாயமான கணவனை 8 ஆண்டுகளுக்கு பின் பிடித்த மனைவி... வேறு பெண்ணுடன் ரொமான்டிக் ரீல்ஸ் போட்டதால் சிக்கிய சோகம்...மனைவிய கர்ப்பமாக்கிட்டு எஸ்கேப் ஆன கணவன் 8 வருஷத்துக்கு ரீல்ஸ் வீடியோ மூலமா சிக்கி இருக்காரு... வேறு ஒரு பெண்ணுடன் போட்ட ரொமான்டிக் ரீல்ஸ் கேடி கணவனை காட்டிக்கொடுத்த பின்னணி என்ன?
ரெட் டிசர்ட் அணிந்த பெண்ணுடன், வெள்ளை பணியனோடு ரீல்ஸ் செய்து கொண்டிருக்கும் இவரை பார்த்து என்ன ஒரு பாசமான கணவன் என்று நினைத்து விட வேண்டாம்... இந்த ரீல்ஸ் வீடியோ தான் வெள்ளை பணியனின் 8 வருட வேஷத்தை வெளுக்க வைத்திருக்கிறது.. இந்த ரீல்ஸ் வீடியோ தான் வெள்ளை பணியனின் 8 வருட வேஷத்தை வெளுக்க வைத்திருக்கிறது.. உத்திரபிரதேசத்தில் திருமணம் செய்த பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு, எஸ்கேப் ஆன இந்த கல்யாண சுந்தரம், பஞ்சாபில் வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து உல்லாசமாக வாழ்ந்து வந்திருக்கிறார். உத்திரபிரதேச மாநிலம் ஹார்தோயில் உள்ள அடமாவ் பகுதியை சார்ந்தவர் ஜிதேந்திர குமார் என்கிற பப்லு. தற்போது 32 வயதாகும் இவருக்கும் ஷீலு என்ற பெண்ணுக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் அந்த உறவு ஓராண்டு கூட நீடிக்கவில்லை. திருமணம் ஆன நாளில் இருந்தே பப்லு, தன் மனைவி ஷீலுவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். தங்க செயின்,தங்க மோதிரம் வேண்டும் என்று ஷீலுவை அடித்து துன்புறுத்தியுள்ளார். ஆனால் குடும்ப வறுமை காரணமாக கணவன் கேட்பதை எல்லாம் ஷீலுவால் கொடுக்க முடியவில்லை. இதற்கிடையில் தான் ஷீலு கர்ப்பம் தரித்திருக்கிறார். ஆனாலும் கூட “வந்தால் வரதட்சணையோடு வா“ என கர்ப்பிணி என்றும் பாராமல் ஷீலுவை வீட்டை விட்டு அடித்து விரட்டி இருக்கிறார் பப்லு. இதுதொடர்பாக ஷீலுவின் குடும்பத்தினர், பப்லு மீது காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை செய்வதாக புகார் அளித்தனர். காவல்துறையினர் விசாரணையை தொடங்கிய நிலையில் திடீரென பப்லு மாயமாகியுள்ளார். இதனையடுத்து பப்லுவின் தந்தை மகனை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எவ்வளவோ தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் தங்கள் மகனை ஷீலு குடும்பத்தினர் கொலை செய்துவிட்டதாக பப்லுவின் குடும்பத்தினர் மீண்டும் புகார் கொடுத்தனர். ஆனால் அது போல எதுவும் நடக்கவில்லை என போலீசாரின் விசாரணையில் உறுதியானது.
இப்படியாக 8 ஆண்டுகள் உருண்டோடி இருக்கிறது. பப்லு எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்? என்ன ஆனது? உயிரோடு இருக்கிறாரா? அல்லது இறந்து விட்டாரா? என எந்த தகவலும் தெரியாமல் இருந்திருக்கிறது. அதன்பிறகு முரார் நகரில் உள்ள சாண்டிலா பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த ஷீலு தனது கணவர் என்றாவது ஒருநாள் திரும்பி வருவார் என வழிமேல் விழி வைத்து காத்திருந்த வேளையில் தான், பப்லு இன்ஸ்டா ரீல்ஸில் தோன்றி மனைவிகு ஷாக் கொடுத்திருக்கிறார்.அரைகுறை ஆடையில் வேறு ஒரு பெண்ணுடன் தனது கணவன் நெருக்கமாக ரீல்ஸ் செய்து வெளியிட்ட வீடியோவை தற்செயலாக பார்த்திருக்கிறார் ஷீலு. கொதித்து போனவர் இது கணவன் தானா? என்பதை உறுதி செய்ய மாமியாரின் வீட்டிற்கு ஓடி இருக்கிறார். அவர்களும் இது காணாமல் போன பப்லு தான் என அடித்து கூறி இருக்கிறார்கள். உடனே அந்த அக்கவுண்டை தொடர்பு கொண்ட போது முடியாமல் போயிருக்கிறது. இதனால் தன்னை கர்ப்பமாக்கி விட்டு சென்ற கணவன் பப்லு வேறு ஒரு பெண்ணுடன் ரீல்ஸ் போட்டிருப்பதாக கோட்வலி சந்திலா காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார் ஷீலு.’ அதன்பேரில் விசாரணை மேற்கொண்டதில், உத்தரபிரதேசத்தில் இருந்து தப்பி ஓடிய பப்லு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் செட்டில் ஆகி, அங்கேயே வேறு ஒரு பெண்ணை திருமணமும் செய்திருக்கிறார். மேலும் அங்குள்ள ஒரு துணி தொழிற்சாலையில் வேலை செய்து வந்திருக்கிறார். அந்த பெண்ணுடன் தான் வித விதமான ரீல்ஸ் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் பப்லு . உடனே போலீசார் பப்லுவை தேடிபிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் மீது வரதட்சனை, மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனைவியை கர்ப்பமாக்கிவிட்டு எஸ்கேப் ஆன பப்லு யாருக்கும் தெரியாமல் வேறு ஒருபெண்ணுடன் நடத்தி வந்த ரகசிய குடும்பத்தை 8 ஆண்டுகளுக்கு பின் ஒரு இன்ஸ்டா ரீல்ஸ் காட்டிக்கொடுத்து விட்டது.
