இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்?

x

இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்ய, வரும் 18ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், இந்தியா கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த முக்கியத் தலைவர்கள் பங்கேற்று, குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை முடிவு செய்வார்கள் என தெரிகிறது. அடுத்த மாதம் 9ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பிலும், வேட்பாளர் யார் என்பதை, பிரதமர் மோடியும், ஜே.பி. நட்டாவும் விரைவில் அறிவிக்க உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்