``பயங்கரவாதமாக இருந்தாலும் சரி, நக்சலிசமாக இருந்தாலும் சரி..'' - பிரதமர் அனல் பறக்க பேச்சு

x

பயங்கரவாதமாக இருந்தாலும் சரி, நக்சலிசமாக இருந்தாலும் சரி, பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற கடுமையான கொள்கையை தங்களது அரசு பின்பற்றுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

முன்னேறி வரும் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுலா, உணவு பதப்படுத்துதல், சுகாதாரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் முதலீட்டை ஊக்குவிக்க கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, வடகிழக்கு மாநிலங்கள் குண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் முற்றுகைகளுடன் தொடர்புடைய காலம் ஒன்று இருந்ததாக தெரிவித்தார்.

இதனால் அங்கு இருந்த இளைஞர்கள் பெரும் இழப்பை சந்திக்க வேண்டியிருந்ததாகவும், எண்ணற்ற வாய்ப்புகளை தவறவிட்டதாகவும் கூறினார்.

எந்தவொரு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும், அமைதியும், சட்டத்தின் ஆட்சியும் மிக முக்கியமானவை என்ற பிரதமர்,

பயங்கரவாதமாக இருந்தாலும் சரி, நக்சலிசமாக இருந்தாலும் சரி, தங்களது அரசு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற கடுமையான கொள்கையைப் பின்பற்றுவதாக தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தனிநபர்கள், ஆயுதங்களை கைவிட்டு அமைதிப் பாதையை தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி,

இளைஞர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குள்ளேயே வேலை வாய்ப்புகளை கண்டறிந்து வருவதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்