``எப்போ GST வரிய குறைப்பீங்க’’ - தயாநிதி மாறன் MP சரமாரி கேள்வி
மருத்துவ உபகரணங்கள் ஜிஎஸ்டி வரி குறைப்பு எப்போது?- நாடாளுமன்றத்தில் தயாநிதிமாறன் எம்பி
மருத்துவ உபகரணங்கள் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி எப்போது குறைக்கப்படும் என, நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.குறைந்த செலவில் சிறப்பாக செயல்படும் மருத்துவ சாதனங்களை அதிகளவில் எப்போது கொள்முதல் செய்யப்படும்? - மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பைத் தவிர்த்து, தனித்து இயங்கக்கூடிய மருத்துவ சாதன ஒழுங்குமுறை ஆணையத்தை நிறுவுவது குறித்து மத்திய அரசு ஏதேனும் திட்டமிட்டுள்ளதா? என்றும் தயாநிதி மாறன் வினா எழுப்பினார். பயனர்கள், உற்பத்தியாளர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் குறித்து பொதுவெளியில் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில், நமது நாட்டிற்கென ஒரு தரவுத்தளத்தை உருவாக்கவும், மருந்துகள் சந்தைக்கு வந்த பின்பும் தொடர் கண்காணிப்பை வலுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். செயற்கை நுண்ணறிவு AI மூலம் நோயை கண்டுபிடிக்கும் வழிமுறைக்கு, ஏதேனும் ஒழுங்குமுறை அமைப்பை நிறுவ மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா? அதன் விவரங்கள் என்ன? என்றும் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.
