``மோடி CM-ஆக இருந்தபோது.. PM-ஆன பின்..’’ நாடே மகிழும் செய்தி.. நேரம்பார்த்து அட்டாக் செய்த காங்கிரஸ்
ஜிஎஸ்டி-யின் தூதுவராக மாறிய மோடி - காங்கிரஸ் விமர்சனம்
முதல்வராக இருந்தபோது ஜிஎஸ்டி வரியை எதிர்த்தவர், பிரதமர் ஆனதும் ஜிஎஸ்டியின் தூதுவராக மாறிவிட்டதாக நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில், ஜிஎஸ்டி முதன்முறையாக ஜூலை 2017-ல் அமல்படுத்தப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி எதிர்த்ததை சுட்டிக்காட்டினார். பாஜக கடந்த 8 ஆண்டுகளாக காங்கிரஸை நம்பவில்லை...எந்த மாற்றங்களையும் கொண்டு வரவில்லை என்று குறைகூறினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் வரிகளை விதித்தபோது, அரசாங்கம் வரி கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது பாஜக அரசு அதை ஒரு திருவிழா போன்று கொண்டாடி வருவதாக விமர்சித்தார். 2006 முதல் ஒரே ஒரு முதல்வர் மட்டுமே ஜிஎஸ்டியை எதிர்த்ததாகவும், அந்த முதல்வர் 2014ல் பிரதமர் ஆனதாகவும், மோடியை ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
