WhatsApp scam | வாட்ஸ்அப் டேட்டிங்.. சிக்கிய முதியவர்.. பெண் போல் பேசி அபேஸ் கும்பல் !

கர்நாடக மாநிலம், பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் உள்ள ஹோரமாவு பகுதியைச் சேர்ந்த 63 வயது முதியவர் ஒருவர் வாட்ஸ்அப் டேட்டிங் மோசடியில் சிக்கி 32 லட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார். "ஹை-சொசைட்டி டேட்டிங் சேவை" என்ற பெயரில் பெண் போல நடித்து மோசடி குழுவினர், முதலில் நுழைவு கட்டணமாக ஆயிரத்து 950 ரூபாய் கட்டணம் பெற்றனர். பின்னர் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு காரணங்களை சொல்லி, முதியவரிடம் 32 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்த நிலையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com