மேகம் வெடித்து சிதறிய பிளந்து கொட்டினால் எப்படி இருக்கும்? - கண்முன் காட்டிய கோர காட்சி
உத்தரகாண்டில் மீண்டும் மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்
உத்தரகாண்டில் மீண்டும் மேகவெடிப்பு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ருத்ரபிரயாக் மற்றும் சாமோலி மாவட்டங்களில் ஏற்பட்ட மேக வெடிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாமோலி மாவட்டத்தில் வீடுகள் இடிந்த நிலையில், இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாகவும், இருவர் மாயமானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கால்நடைகள் மண்ணில் புதைந்த நிலையில், தொடர் மழையால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனிடையே, தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் இரவில் மேகவெடிப்பு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்தன. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பேரிடர் மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
