டூல்கிட் என்றால் என்ன? போலீஸ் வழக்குப்பதிவு - விளக்கம்

டெல்லி விவசாயிகள் போராட்டம் விவகாரத்தில் டுவிட்டரில் பகிரப்பட்ட டூல்கிட்டை உருவாக்கியவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்திருப்பதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
டூல்கிட் என்றால் என்ன? போலீஸ் வழக்குப்பதிவு - விளக்கம்
Published on

டெல்லி விவசாயிகள் போராட்டம் விவகாரத்தில் டுவிட்டரில் பகிரப்பட்ட டூல்கிட்டை உருவாக்கியவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்திருப்பதாக போலீஸ் தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும் இந்த டூல்கிட் என்பது ஒரு விவகாரம் குறித்த முழு தகவல் தொகுப்பும் அடங்கிய ஆவணமாகும். மைக்ரோசாப்ட் வேர்டு போன்ற படிவத்தில் பிரச்சினையை கோப்பாக தயாரித்து மக்களின் ஆதரவை கோருவதுடன், அதனை தீர்ப்பதற்கான வழிகளையும் அணுகவும் செய்யலாம். இதற்கான சேவையை பல்வேறு இணையதளங்கள் வழங்குகிறது. மேலும், ஒருவர் உருவாக்கி பகிரும் டூல்கிட்டை மற்றொருவர், தனக்கு தெரிந்த தகவலுடன் மாற்றி அமைக்கவும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com