ரன் வேட்டையில் வெஸ்ட் இண்டீஸ்..ஆப்கனை பந்தாடி அபார வெற்றி

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றதுகுரூப் சி பிரிவில் செயிண்ட் லூசியாவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ரன் வேட்டையில் ஈடுபட்டனர். பவுண்டரி மழை பொழிந்த நிகோலஸ் பூரன் 8 சிக்சர்களைப் பறக்கவிட்டு 98 ரன்களில் ரன்-அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 219 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான், 17வது ஓவரில் 114 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மெக்காய் 3 விக்கெட்டுகளையும், அகீல் ஹுசைன் மற்றும் குடகேஷ் மோட்டி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com