முகநூலில் மனைவியை தரக்குறைவாக விமர்சித்ததால் ஆத்திரம் : சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் வீடியோ

மேற்கு வங்க மாநிலம், ஃபலகட்டாவில் மாவட்ட நீதிபதி ஒருவர் முகநூலில் தமது மனைவியை விமர்சித்ததற்காக, காவலில் இருந்த கைதியை போலீசார் முன்னிலையில், சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முகநூலில் மனைவியை தரக்குறைவாக விமர்சித்ததால் ஆத்திரம் : சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் வீடியோ
Published on

மேற்கு வங்க மாநிலம், ஃபலகட்டாவில் மாவட்ட நீதிபதி ஒருவர் முகநூலில் தமது மனைவியை விமர்சித்ததற்காக, காவலில் இருந்த கைதியை போலீசார் முன்னிலையில், சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிகில் நிர்மல் என்பவரின் மனைவியை, போனோட் சர்கார் என்ற இளைஞர், முகநூலில் தரக்குறைவாக விமர்சித்து வந்ததாக கூறப்பகிறது. இதனையடுத்து, புகாரின் பேரில், போலீசார் அந்த இளைஞரை கைது செய்ததை அறிந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும், நீதிபதியுமான நிகில்நிர்மல், காவல்நிலையத்தில், மனைவியுடன் வந்து தாக்குதல் நடத்தினார். இதன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த காட்சியை பார்ப்பவர்கள், நீதிபதிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com