

ஊரடங்கு நடவடிக்கைகளை முறையாக அமல்படுத்தவில்லை என கூறி, மேற்குவங்க தலைமைச்செயலாளருக்கு, உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், காய்கறி மார்கெட் மற்றும் மீன், மட்டன் சந்தைகளில் கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இது தவிர, வழிபாட்டு தளங்கள் மற்றும் மத சபை கூடுவதை போலீசார் தடுக்கவில்லை என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டதால் உள்துறை அமைச்சகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.