மேற்கு வங்கத்தில் வன்முறை சம்பவங்கள் : முதல்வர் மம்தாவுக்கு மத்திய அரசு கடிதம்

மேற்கு வங்க மாநிலத்தில் தொடரும் வன்முறை சம்பவங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
மேற்கு வங்கத்தில் வன்முறை சம்பவங்கள் : முதல்வர் மம்தாவுக்கு மத்திய அரசு கடிதம்
Published on

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில், கடந்த சில

நாட்களாக மாநிலத்தில் நடக்கும் வன்முறை சம்பவங்கள், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காப்பதில், மாநில போலீசாரின் தோல்வியை காட்டுவதாகவும், சட்டம் ஒழுங்கை காக்கவும், அமைதி நிலவவும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் வன்முறை தொடர்பாக அறிக்கை அளிக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் இடையே நடந்த மோதலில் 3 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com