"வெல்கம் டூ இந்தியா" - 5 வது முறையாக வெற்றி
இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்டு வருவதற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ், ஐந்தாம் கட்டமாக மேலும் 286 பேர் விமானம் மூலம் டெல்லி திரும்பினர். இவர்களில் 23 பேர் தமிழர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை வரவேற்ற தமிழக அரசு அதிகாரிகள், உணவு வழங்கி சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். டெல்லி திரும்பிய 23 தமிழர்களில், 17 பேர் சென்னைக்கும், இருவர் மதுரைக்கும், நான்கு பேர் கோவைக்கும் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
