"சிலிண்டர வெடிக்க வெச்சு செத்துருவோம்..எங்க வீட விடுங்க.." | கதற கதற வெளியேற்றிய அதிகாரிகள்
செட்டிகுளம் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக, 20 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வந்தனர். இந்த சூழலில், சாலை விரிவாக்கப்பணியை ஒட்டி, ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறைனர் உத்தரவிட்டனர். மேலும், அவர்களுக்கு அதே பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் பட்டா வழங்கப்பட்டும், அங்கிருந்து காலி செய்யாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளிடம், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, சிலரை போலீசார் கைது செய்தனர். அப்போது, போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் களேபரம் ஆனது.
Next Story
