"விமானத்தின் வேகத்தை அதிகரிக்கிறார்கள் என நினைத்தோம்..ஆனால்.."
"விமான விபத்தில் உயிர் பிழைத்ததை என்னால் நம்ப முடியவில்லை"
விமானம் பறக்கத் தொடங்கிய சில நொடிகளில் அனைத்தும் நின்றுபோனதுபோல் உணர்ந்தோம், பச்சை, வெள்ளை விளக்குகள் எரியத் துவங்கின
விமானத்தின் வேகத்தை அதிகரிக்கிறார்கள் என நினைத்தோம் - ஆனால் விமானம் கட்டிடத்தின் மீது மோதி விட்டது
விடுதி மீது விமானம் மோதிய பக்கம் நான் அமரவில்லை, நான் விழுந்த இடம் விடுதியின் தரைப்பகுதி
எனக்கு அருகில் இருந்த கதவு உடைந்ததால் நான் வெளியில் வந்தேன்
விமானம் விழுந்த பகுதியின் எதிர்ப்பக்கத்தில் சுவர் இருந்ததால் யாராலும் தப்ப முடியவில்லை
என் சீட் பெல்ட்டை அகற்றிவிட்டு வெளியேறும்போது சில எரிந்த உடல்களைப் பார்த்தேன், அதில் ஒரு விமானப் பணிப்பெண்ணின் உடலும் இருந்தது
"நான் எப்படி பிழைத்தேன் என எனக்கே தெரியவில்லை - நானும் இறந்திருப்பேன் என்றே நினைத்தேன்"
கண் விழித்தபோதுதான் நான் உயிரோடு இருப்பது தெரியவந்தது. விபத்து குறித்து என்னிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்..
