பாய் பெஸ்டியுடன் காதல் மனைவி போட்ட ஸ்கெட்ச் -படுக்கையில் பயங்கரம் -காட்டிக்கொடுத்த கை

x

வட மாநிலங்கள்ள கள்ளக்காதலனுக்காக கணவன கொலை செய்யக்கூடிய பாசக்கார மனைவிகள் தொடர்ந்து அதிகரிச்சிட்டே வர்றத நாம தினமும் பாத்துட்டு வரோம்... அப்படி ஒரு அசாத்திய கொலைகாரியோட அதிர வைக்கும் கிரைம் ஹிஸ்ட்ரி இது....

உத்திரபிரதேசம் மீரட்டில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொன்ற சம்பவத்தை அதற்குள் மறந்திருக்க மாட்டோம்...

டிரம்முக்குள் கணவனுக்கு சமாதி கட்டிய அந்த கோரத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் உபியில் நடந்திருக்கிறது ஒரு படுகொலை...

இந்த முறை மனைவி கணவனுக்கு சமாதி கட்டவில்லை...

கழுத்தை நெரித்து கொன்று விட்டு மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடி இருக்கிறார்.

கொலை செய்யப்பட்டவர் உத்திரபிரதேசம் மாநிலம் பிஜ்னோர் பகுதியை சேர்ந்த தீபக். 30 வயதாகிறது. இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர். ஆனால், அதில் பெரிய நாட்டமில்லாத தீபக் திருமணம் செய்து கொண்டு மனைவி குழந்தைகளுடன் உள்ளூரிலேயே சராசரி வாழ்க்கையை வாழ விரும்பி இருக்கிறார்.

இதற்காக ராணுவ பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, சொந்த ஊருக்கு திரும்பிய தீபக், சமீபத்தில் ரயில்வேயில் டெக்னீஷியனாக வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.

அதன்பிறகு கடந்த ஆண்டு தான் தனது பள்ளி பருவக் காதலியான ஷிவானியை திருமணம் செய்திருக்கிறார் தீபக். இந்த தம்பதிக்கு தற்போது நான்கு மாத ஆண்குழந்தை உள்ளது.

சமீபத்தில் தான் ஆதர்ஷ் நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடும்பத்துடன் குடியேறி இருக்கிறார். இந்த நிலையில் தான் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி அன்று ராம நவமியை முன்னிட்டு தீபக் வீட்டிலேயே சிறப்பு பூஜை செய்ததாக தெரிகிறது. அப்போது தீபக் நெஞ்சை பிடித்து கொண்டு மயங்கி விழுந்ததாக அவருடைய மனைவி அலறி அடித்துக்கொண்டு அக்கம்பக்கத்தினரை வரவழைத்திருக்கிறார்.

அவர்கள் பேச்சு மூச்சின்றி கிடந்த தீபக்கை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கையை விரித்திருக்கிறார்கள்.

தீபக்கின் இந்த திடீர் நெஞ்சு வலியில் உறவினர்களுக்கு நம்பிக்கை இல்லை. தீபக் ஒரு இளம் வயது ராணுவ வீரர், நல்ல திடகாத்ரமானவர், உடலில் எந்த பிரச்சனையும் இல்லாதவர்... பிறகு எப்படி மாரடைப்பு ஏற்பட்டிருக்க முடியும் என சந்தேகித்தவர்கள் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீபக்கின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து மனைவி ஷிவானியிடம் விசாரித்திருக்கிறார்கள்.

பூஜை செய்யும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த கதையை திரும்ப திரும்ப சொல்லி இருக்கிறார் ஷிவானி. ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் வெளிவந்த உடற்கூராய்வு அறிக்கை ஷிவானியின் வாக்குமூலத்தை பொய்யாக்கியது.

தீபக் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார் என போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அவரது வலது பக்க கழுத்தில் அதிக அழுத்தம் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதை வைத்து போலீசார் நடந்திருப்பது கொலை என்றும் அதை செய்தது ஷிவானி தான் என்றும் உறுதி செய்தனர்.

காரணம் ஷிவானியின் ஒரு இடது கை பழக்கமுடையவர். அவர் தான் கணவருக்கு எதிரில் நின்று கழுத்தை நெரித்திருக்க வேண்டுமென போலீஸார் அவதானித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்