துடிதுடித்த மனைவி... இறக்கம் காட்டாத கணவன்.. 5வது பிரசவத்தில் கர்ப்பிணிக்கு நடந்த பயங்கரம்
நிறைமாத கர்ப்பிணிக்கு “வலி தெரியாமல் பிரசவம் பாருங்க“ என டாக்டர்களிடம் ரெக்குவஸ்ட் வைக்கின்ற கணவர்களை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், இந்த கதையில் கர்ப்பிணி மனைவியிடமே பேறுகாலம் பார்க்கும் போது அப்படிதான் வலிக்கும் உயிர்போய்ட்டு உயிர் வந்தா தான் தாய்மைக்கு அழகு எனக் கூறி வீட்டிலயே பிரசவம் பார்த்திருக்கிறார் இந்த கோளரான கணவன்.
நடந்த பிரசவத்தின் போது அந்த பெண்ணிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால், அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டதால் கிட்டதட்ட மூன்று மணி நேரம் மூச்சித்திணறி அந்த பெண் பரிதாபமாக இறந்து போயிருக்கிறார்.
முழுக்குற்றப்பின்னணியையும் அறிய கடவுளின் சொந்த பூமிக்கு விரைந்தார் நம்முடைய செய்தியாளர் சிவசபாபதி.
உயிரிழந்தவர் 35 வயதான அஸ்மா ( Asma ). கேரளா மாநிலம் மலப்புறம் மாவட்டத்தை சேர்ந்தவர். அஸ்மாவிற்கு வீட்டிலயே பிரசவம் பார்த்த அந்த பாசக்கார கணவரின் பெயர் Sirajudheen.
அடிப்படைவாதத்தில் ஆழமான நம்பிக்கை உடைய Sirajudheen “Madavoor Qafila“ என்கிற பேரில் யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.
இஸ்லாமிய மதம் தொடர்பான கருத்துக்களை சிராஜுதீன் அவருடைய யூடியூப்பில் தொடர்ந்து பதிவிட்டு வர 65000 பேர் இவரது சேனலை சப்ஸ்க்ரைப் செய்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் சிராஜுதீனின் மனைவி அஸ்மா ஐந்தாவது முறையாக கருவூற்றிருக்கிறார். அவரின் முதல் இரண்டு குழந்தைகள் மட்டுமே மருத்துவமனையில் பிறந்திருக்கிறது. கடைசி இரண்டு குழந்தைகளை அஸ்மா அவருடைய வீட்டிலயே பெற்றெடுத்திருக்கிறார்.
ஆம். அடிப்படைவாதத்தில் அதீத ஆர்வம் கொண்டிருந்த சிராஜுதின் மருத்துவமனை எதற்கு? நம்முடைய முன்னோர்கள் Caesarean பற்றி கேள்விப்பட்டிருப்பார்களா ? மருந்து எதற்கு மாத்திரை எதற்கு ? என பல கேள்விகளை எழுப்பி தற்போதுள்ள Maternity Packages அனைத்தும் மருத்துவமனைகள் அடிக்கும் கொள்ளை என திடமாக நம்பி இருக்கிறார்.
அதன்காரணமாக, வீட்டிலயே இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த வீர மங்கையென அவருடைய மனைவியை புகழ்ந்தும் இதுப்போன்ற செயல்களை ஆதரித்தும் வந்திருக்கிறார்.அதோடு, தன்னுடைய ஐந்தாவது குழந்தைக்கும் வீட்டிலயே பிரசவம் பார்த்து ஹாட்ரிக் அடிக்க வேண்டுமென நினைத்திருக்கிறார் சிராஜூதின்.
இந்நிலையில் தான் சென்ற வெள்ளிக்கிழமை அஸ்மா திடீரென பிரசவ வலியால் அலறி இருக்கிறார். சிறிதும் சீரியஸ் ஆகாத சிராஜுதீன் மனைவிக்கு வீட்டிலயே பிரசவம் பார்த்துள்ளார். அவர் ஆசைப்பட்டது போலவே ஆண் குழந்தை பிறந்து அவருடைய ஹாட்ரிக் முயற்சியையும் வெற்றி பெற செய்திருக்கிறது.
ஆனால், குழந்தை பிறந்த பிறகு அஸ்மாவுக்கு திடீரென அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. அவர் கணவரிடம் தன்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கெஞ்சி இருக்கிறார். ஆனால், சிராஜுதின் பிரசவ வலி அப்படி தான் இருக்குமென கூறி மனைவி கண்டுக்கொள்ளாமல் விட்டுள்ளார்.
கிட்டதட்ட மூன்று மணி நேரம் படுக்கையிலயே மூச்சி திணறியபடி கிடந்த அஸ்மா ஒருக்கட்டத்தில் உலகத்திலிருந்து விடைப்பெற்றிருக்கிறார். மனைவி உயிரிழந்துவிட்டதை பார்த்து அதிர்ந்து போன சிராஜுதீன் நடந்த சம்பவம் எக்காரணத்தை கொண்டும் வெளியே கசிந்துவிட கூடாதென கவனமாக இருந்திருக்கிறார்.
