சிறப்பு தடுப்பூசி மையங்களை மூட உள்ளோம் - முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தகவல்

டெல்லியில் கொரோனாவின் வேகம் கணிசமாகக் குறைந்துள்ளது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
சிறப்பு தடுப்பூசி மையங்களை மூட உள்ளோம் - முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தகவல்
Published on

சிறப்பு தடுப்பூசி மையங்களை மூட உள்ளோம் - முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தகவல்

டெல்லியில் கொரோனாவின் வேகம் கணிசமாகக் குறைந்துள்ளது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.இன்று காணொலி மூலம் உரையாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று விகிதம் 3.5 சதவீதமாக குறைந்து உள்ளதாக தெரிவித்தார். போதுமான தடுப்பூசிகள் இல்லாததால் 18-44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி மையங்கள் மூடப்பட உள்ளது எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.மே மாதத்தில் 16 லட்சமாக இருந்த தடுப்பூசி ஒதுக்கீட்டை, மத்திய அரசு ஜூன் மாதத்திற்கு 8 லட்சமாகக் குறைத்து உள்ளதாகவும், டெல்லி மக்களுக்கு தடுப்பூசி போட மொத்தம் 2.5 கோடி தடுப்பூசிகள் தேவை எனவும் அவர் தெரிவித்தார். கொரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி என்றும், போதுமான அளவு தடுப்பூசியை டெல்லிக்கு கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்து உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com