

செப்டம்பர் மாதத்தில் மட்டும் 22 லட்சம் இந்திய பயனாளிகளின் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் புதிய ஐ.டி சட்டத்தின் அடிப்படையில் இவை தடை செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸப் நிறுவனம் கூறியுள்ளது. புகார்கள் பெறப்பட்ட பின், சிறப்பு software மூலம் அவற்றை உடனுக்குடன் பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியுள்ளது. இதைப் பற்றிய மாதாந்திர தகவல் அறிக்கையை ஜூலை 15இல் இருந்து வாட்ஸப் சமர்பித்து வருகிறது.