

கேரள மாநிலம் இடுக்கி அணையிலிருந்து ஆறாவது முறையாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஒரு மதகு வழியாக வினாடிக்கு ஆயிரத்து 410 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இடுக்கி அணை இந்த ஆண்டு இரண்டாவது முறையாக திறக்கப்படுகிறது. கடந்த மாதம் 19ஆம் தேதி 3 ஷட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தற்போது மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பெரியாறு கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.