கேரள கடலில் மூழ்கிய கப்பலில் இருந்தது இதுவா? வெளியான முழு விவரம்

x

கேரள கடலில் மூழ்கிய கப்பலில் இருந்தது இதுவா? வெளியான முழு விவரம்

கொச்சி அருகே 2 வாரங்களுக்கு முன் கடலில் மூழ்கிய லைபீரிய கப்பலில் இருந்த பொருட்களின் விவரங்களை கேரள அரசு வெளியிட்டுள்ளது.

கப்பல் விபத்துக்குள்ளான பிறகு அந்த பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேரள அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், கப்பலில் கொண்டு வரப்பட்ட பொருட்களின் விவரங்களை கேட்டு, கேரள உயர்நீதிமன்றத்தில் மீனவர் சங்கத் தலைவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மூழ்கிய கப்பலில் கொண்டு வரப்பட்ட பொருட்களின் விவரத்தையும், சுற்றுச்சூழல் பாதிப்பை சரிசெய்ய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கு தெரிவிக்குமாறு கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், இதுகுறித்து 2 வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து, கப்பலில் இருந்த பொருட்களின் விவரங்களை கேரள அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, கப்பலில் 13 கொள்கலன்களில் கால்சியம் கார்பைடு என்ற வேதிப்பொருளும், 4 கொள்கலன்களில் முந்திரி பருப்பும் இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

46 கொள்கலன்களில் தேங்காய் மற்றும் முந்திரி பருப்புகள் இருந்ததாகவும், 87 கொள்கலன்களில் மரமும், 60 கொள்கலன்களில் பிளாஸ்டிக் பொருட்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 71 கொள்கலன்கள் காலியாக இருந்தன என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்