கேரள கொ*ல வழக்கில் தேடப்பட்டவர் தமிழகத்தில் 28 ஆண்டுகளுக்கு பிறகு கைது

x

கொலை வழக்கில் தேடப்பட்டவர் 28 ஆண்டுகளுக்கு பிறகு கைது

கேரள மாநிலம் குமுளியில் கடந்த 1997 ஆம் ஆண்டு சொத்து தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தேனி மாவட்டத்தை சேர்ந்த மகாதேவன் என்பவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவான மகாதேவன் தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள காமராஜபுரம் மலை கிராம பகுதியில் வாழ்ந்து வந்தார். இதனையடுத்து 28 ஆண்டுகளுக்கு பிறகு மகாதேவனின் இருப்பிடத்தை கண்டுபிடித்த கேரள போலீசார், தமிழக போலீஸ் உதவியுடன் மகாதேவனை கைது செய்தனர். கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் 28 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட சம்பவம் வருசநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்